/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரஸ்வதி எக்ஸல் பள்ளி சாதனை
/
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரஸ்வதி எக்ஸல் பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரஸ்வதி எக்ஸல் பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரஸ்வதி எக்ஸல் பள்ளி சாதனை
ADDED : மே 12, 2024 05:50 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சோழகனுாரில் உள்ள சரஸ்வதி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி பவித்ரா 500க்கு 471, மாணவர் சாய்பிரசன்னா 458, ராகுல் 446, மாணவி சிந்துஜா 424, மாணவர் தினேஷ் 417 மதிப்பெண் பெற்று முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியர்களை சேர்மன் ரவீந்திரன், பொருளாளர் சிதம்பரநாதன், நிர்வாக அறங்காவலர் முத்துசரவணன், தாளாளர் ராஜசேகரன், நிர்வாக அலுவலர் முத்துசிவஞானம், முதல்வர் இந்துமதி உட்பட பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.