/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாதிக்கும் விழுப்புரம் அரசு கல்லுாரி சாதிக்கும் விழுப்புரம் அரசு கல்லுாரி
/
சாதிக்கும் விழுப்புரம் அரசு கல்லுாரி சாதிக்கும் விழுப்புரம் அரசு கல்லுாரி
சாதிக்கும் விழுப்புரம் அரசு கல்லுாரி சாதிக்கும் விழுப்புரம் அரசு கல்லுாரி
சாதிக்கும் விழுப்புரம் அரசு கல்லுாரி சாதிக்கும் விழுப்புரம் அரசு கல்லுாரி
ADDED : ஆக 01, 2024 07:13 AM

விழுப்புரம்: விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர்கள் பென்காக் சிலாட் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள், பல்வேறு போட்டிகளில், பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். தற்போது கராத்தே, பாக்சிங், தேக்வாண்டோ போன்ற உடல் திறனுடைய புதிய விளையாட்டான பென்காக் சிலாட் விளையாட்டு போட்டிகளில், மாநில, தேசிய மற்றும் பல்கலைக்கழக அளவில் வெற்றி பெற்று, பல சாதனைகளை புரிந்து வருகின்றனர்.
கணிதத் துறை 3ம் ஆண்டு மாணவி ஷீலா 50, 55 கிலோ எடை பிரிவில், கடந்தாண்டு சென்னையில் 4வது சீனியர் லெவல் மாநில அளவில் நடந்த போட்டியில், வெண்கலம் வென்றார். மேலும், அண்ணாமலை பல்கலை., சார்பாக விழுப்புரம் மற்றும் கடலுார் மண்டல அளவிலான கல்லுாரிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் தங்கம் வென்றார்.
அகில இந்திய அளவில் பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டரில் ஜி.என்.டியூ., பல்கலையில் நடந்த போட்டியிலும்,டையூவில் நடைபெற்ற பீச் நேஷனல் தெரிவு போட்டியிலும் சாதித்தார்.
வணிகவியல் துறை 3ம் ஆண்டு மாணவி மோகனபிரியா 45,55 கிலோ எடை பிரிவில், சீனியர் லெவல் மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றார். மேலும் அஸ்மிதா கேலோ இந்தியா போட்டியிலும் தங்கம் வென்றார்.
வேதியியல் துறை 3ம் ஆண்டு மாணவி இந்துமதி, 45 கிலோ எடை பிரிவில், 4வது சீனியர் லெவல் மாநில போட்டியில் வெண்கலம் வென்றார்.
ஆங்கிலத்துறை 3ம் ஆண்டு மாணவி பரணி 2023-24ல் நடந்த கேலோ இந்தியா போட்டியில் வெண்கலம் வென்றார்.
கணினி துறை மாணவி ஹேமபரமேஸ்வரி 4வது மாநில அளவில் நடந்த சீனியர் போட்டியில் தங்கமும், 2ம் ஆண்டு மாணவர் சந்தோஷ்குமார், சீனியர் லெவல் மாநில போட்டியில் வெண்கலமும் வென்றனர்.
கடந்த வாரம் மாநில அளவில் விக்கிரவாண்டியில் நடந்த போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றனர். சாதித்த விளையாட்டு வீரர்களை கல்லுாரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் சேட்டு, உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா, விளையாட்டு கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வாலிபால் மணி, தமிழ்நாடு பென்காக் சிலாட் செயலாளர் மகேஷ்பாபு மற்றும் மாவட்ட பென்காக் சிலாட் பயிற்சியாளர் பரந்தாமன் ஆகியோர் பாராட்டினர்.