/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் குழந்தைகளை காப்போம்: மாவட்ட செயல் திட்ட கூட்டம்
/
பெண் குழந்தைகளை காப்போம்: மாவட்ட செயல் திட்ட கூட்டம்
பெண் குழந்தைகளை காப்போம்: மாவட்ட செயல் திட்ட கூட்டம்
பெண் குழந்தைகளை காப்போம்: மாவட்ட செயல் திட்ட கூட்டம்
ADDED : மே 28, 2024 11:35 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்து மாவட்ட அளவிலான செயல் திட்ட கூட்டம் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கி, கூறியதாவது,
இந்த திட்டம் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை அதிகரிப்பதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2018 ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பாலின சமநிலையை மேம்படுத்தவும், கல்வி கற்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் மறு சீரமைப்பு செய்து, கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2018 ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை பாலின விகிதம் குறைவதால் எதிர்காலத்தில், சமூகத்தில் நற்பண்புகள் குறைதல், பெண் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்தல், பெண் குழந்தைகள் கடத்தல், ஆணுக்கு திருமணத்தின் போது பெண் கிடைக்காத நிலை ஏற்படுதல், ஒரு பெண் பல ஆண்களை மணக்கும் நிலை ஏற்படம்.
பெண் குழந்தைக்கு 18 வயதிற்குள் திருமணம் செய்தால், 2 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிதலுக்கு உட்படுத்தினால், கணவர் அல்லது உறவினருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பாலியல் குற்றங்களுக்கு 5 ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதில், ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரன், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், சி.இ.ஓ., அறிவழகன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.