ADDED : மார் 10, 2025 06:00 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிகுலேஷன் பள்ளியில் மகளிர் தினம் மற்றும் ஆண்டுவிழா நடந்தது.
விழாவிற்கு, விருத்தகிரி கல்வி அறக்கட்டளைத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். அரிமா சங்க தலைவர் டாக்டர் மூர்த்தி, மோட்சகுளம் முன்னாள் ஊராட்சி தலைவர் சுலோசனா, ஆலிவ் ட்ரீ மெட்ரிக் பள்ளி தாளாளர் இளம்பரிதி, நட்ராஜ் ஐ.டி.ஐ., தாளாளர் மேகநாதன், அருணை அச்சக உரிமையாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். தாளாளர் தேன்மொழி ராஜேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு, பள்ளி முதல்வர் வாசுகி நினைவுப் பரிசு வழங்கினார். மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குனர் சுமதி தன்னம்பிக்கை குறித்தும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
ஐ.டி.ஐ., மேலாளர் மஞ்சுளா, பயிற்சி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பழனிவேலு கல்வி நிறுவன அறங்காவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.