
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது.
இயற்பியல் துறை தலைவர் டாக்டர் முத்துவேல் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் டாக்டர் அகிலா, துவக்கவுரை ஆற்றினார். சென்னை எஸ்.எம்.சி., சிமாட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் செந்தில் கண்ணன் சிறப்புரை ஆற்றினார். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் மாணவிகள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கணிதத் துறை தலைவர் சுகன்யா நன்றி கூறினார்.