/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் சீல் வைப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் சீல் வைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் சீல் வைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் சீல் வைப்பு
ADDED : ஜூலை 12, 2024 06:30 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுப் பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம், 276 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. தொகுதியில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களின் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் ஓட்டு போட்டனர். 82.48 சதவீதம் ஓட்டு பதிவானது.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலிருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று காலை 11:15 மணிக்கு வேட்பாளர்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் பொது பார்வையாளர் அமித் சிங்பன்சால், மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி தலைமையில் ஸ்டிராங் ரூமில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், மாவட்ட எஸ்.பி., தீபக் சுவாச், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜ், தேர்தல் தனி தாசில்தார் கணேசன் உடனிருந்தனர்.
ஓட்டு எண்ணும் மையம் முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ,24 மணிநேரமும் துணை ராணுவம், சிறப்பு காவல் படை, போலீசார் என 3 கட்ட பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.