/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு: கலெக்டர் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு: கலெக்டர் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு: கலெக்டர் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு: கலெக்டர் ஆய்வு
ADDED : ஏப் 27, 2024 04:22 AM

விழுப்புரம் : விழுப்புரம் (தனி) தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி ஆய்வு செய்தார்.
விழுப்புரம் (தனி) தொகுதி ஓட்டு எண்ணும் மையமான, விழுப்புரம் அரசு அண்ணா கலைக்கல்லூரி மையத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 6 தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், தனித்தனியாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு சுழற்சி முறையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமரா கண்காணிப்பு மூலம், கண்காணிப்பு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
ஓட்டு எண்ணும் மையத்தின் கண்காணிப்பு பணியை, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாயில் பகுதி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, ஆய்வு செய்தார். இதனையடுத்து, ஸ்டாராங் ரூம் முன்பு போலீஸ் பாதுகாப்பையும் பார்வையிட்டார்.
அங்கு சுழற்சி முறையில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததை பார்வையிட்டு, அவர்களிடம் விசாரித்தார். தொடர்ந்து, கண்காணிப்பு அறையிலிருந்து சிசிடிவடி கேமரா கண்காணிப்பு காட்சிகளையும் பார்வையிட்டு, அங்குள்ள அலுவலர்களிடம், பாதுகாப்பு நிலவரங்களை கேட்டறிந்தார்.

