/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இந்தியன் வங்கி நிறுவனத்தில் சுயதொழில் பயிற்சி துவக்க விழா
/
இந்தியன் வங்கி நிறுவனத்தில் சுயதொழில் பயிற்சி துவக்க விழா
இந்தியன் வங்கி நிறுவனத்தில் சுயதொழில் பயிற்சி துவக்க விழா
இந்தியன் வங்கி நிறுவனத்தில் சுயதொழில் பயிற்சி துவக்க விழா
ADDED : மார் 14, 2025 04:55 AM

விழுப்புரம்: இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இந்தாண்டிற்கான எம்பிராய்டரி மற்றும் துணை ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் இந்த மாவட்டத்தை சேர்ந்த மகளிர்கள் தொழில் முனைவோர்களாக உருவாகிடும் வகையில் அழகுக்கலை, மொபைல் பழுது நீக்கம், ஆரி எம்பிராய்டரி டெய்லரிங், மென்பொம்மை தயாரித்தல், சணல் பை தயாரித்தல், துணி ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது, மேலும் பயிற்சி பெறுவோருக்கு பயிற்சி உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சியை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பயிற்சி பெற்று தொழில் முனைவோர்களாக உள்ள 10 மகளிருக்கு தொழில் முனைவோருக்கான விருதை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஸ்வரன், விழுப்புரம் இந்தியன் வங்கி மேலாளர் தமிழ்மணி, இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயக்குனர் பேபி ஷாலினி, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் அருண்குமார் உட்பட ் பலர் கலந்து கொண்டனர்.