ADDED : ஆக 17, 2024 03:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தெய்வாணை அம்மாள் மகளிர் கல்லூரியில், சென்னை சதர்லலண்ட் அசோசியேட் சி.எஸ். இன்டர்நெட்நிறுவனம் சார்பில் “தொழில் மேம்பாடு” என்ற தலைப்பில் கணினிஅறிவியல் ஆராய்ச்சித் துறை கருத்தரங்கு நடந்தது.
கணினி அறிவியல்துறைத் தலைவர் மோசிகா வரவேற்றார். கல்லூரி மாணவிகள், முன்னாள் மாணவிகள், கருத்தரங்கில் பங்கேற்றனர். சதர்லலண்ட் அசோசியேட் சி.எஸ். இன்டர்நெட் நிர்வாகி சௌந்தர்யாவால் பங்கேற்று, ஐடி நிறுவனங்களை எவ்வாறு அணுகுவது, ஐடி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்பங்களை எவ்வாறு பதிவேற்றுவது என்பது குறித்தும் வழிகாட்டினார். HTML, Java, python போன்ற மென்பொருள்களைப் படிக்கமாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
உதவி பேராசிரியர் சுமிதா நன்றி கூறினார்.

