/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோட்டை ரோட்டரி சங்க ஆலோசனை கூட்டம்
/
செஞ்சி கோட்டை ரோட்டரி சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 15, 2024 05:45 AM

செஞ்சி: செஞ்சி கோட்டை ரோட்டரி சங்க ஆலோசனை கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்க முடிவு செய்துள்ளனர்.
செஞ்சி கோட்டை ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.
செயலாளர் இன்பழகன், பொருளாளர் கோகுகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர்கள் குறிஞ்சிவளவன், ராஜேந்திரன், கருணைவேல், சந்திரசேகர், ஏழுமலை மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதி மாதம் இரண்டவது, நான்காவது செவ்வாய்க்கிழமைகளில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும், சுதந்திர தினத்தன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.