/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் மெஷின் பழுது நீக்கம்: கழிவுநீர் வெளியேற்றும் பணி துரிதம்

ADDED : ஏப் 27, 2024 04:21 AM

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தினமலர் செய்தி எதிரொலியாக, கழிவுநீரை வெளியேற்றி சீரமைக்கும் பணி நடந்தது.
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்தது. இந்த பணிகள் பல பகுதிகளில் முடிந்து சாலை போடும் பணிகள் நடந்துள்ளது. வடக்கு தெரு, மாசிலாமணிபேட்டை, கிழக்கு பாண்டி ரோடு கல்லறை வீதி உட்பட நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது.
இந்த அடைப்பை சரிசெய்யும் இயந்திரம் பழுதானது. இதை சரிசெய்யும் பணியாளர்கள் கோவையில் இருந்து வர தாமதாவதாலும், நகராட்சி நிர்வாகம் வரழைக்காமல் காலம் தாழ்த்துவதால் நகரில் முக்கிய வீதிகளில் கழிவுநீர் வெளியேறி துார்நாற்றம் வீசுவது சம்பந்தமாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகியது.
இதன் எதிரொலியாக, விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதாள சாக்கடை அடைப்பை ஜெட் ரோடிங் இயந்திரம் வாகனம் மூலம் சாக்கடை நீரை வெளியேற்றி சரி செய்துள்ளனர்.
இந்த வாகனத்தில் உள்ள பழுதை நீக்கி, அடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில் ஊழியர்கள் சரிசெய்யும் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு முடித்துள்ளனர்.