/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணிடம் பாலியல் சீண்டல்: 2 பேர் மீது வழக்கு
/
பெண்ணிடம் பாலியல் சீண்டல்: 2 பேர் மீது வழக்கு
ADDED : செப் 04, 2024 12:12 AM
விழுப்புரம் : மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண், கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி, வீட்டிலிருந்த அவர், யாருக்கும் தெரியாமல் பஸ் ஏறி விழுப்புரம் வந்துள்ளார்.
பல்வேறு இடங்களில் திரிந்த அவரை கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி மகன் நிதிஷ்குமார், 22; பாலச்சந்திரன் மகன் ராமச்சந்திரன், 25; ஆகிய இருவரும், இந்திராநகர் தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அவர் கூச்சலிட்டதால், இருவரும் தப்பியோடினர்.
இதுகுறித்து, அந்த பெண்ணின் பெற்றோர் நேற்று கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து 2 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.