/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீவனுார் விநாயகர் கோவிலில் சங்கரட ஹர சதுர்த்தி விழா
/
தீவனுார் விநாயகர் கோவிலில் சங்கரட ஹர சதுர்த்தி விழா
தீவனுார் விநாயகர் கோவிலில் சங்கரட ஹர சதுர்த்தி விழா
தீவனுார் விநாயகர் கோவிலில் சங்கரட ஹர சதுர்த்தி விழா
ADDED : மே 28, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், : தீவனூர் சுயம்பு பொய்யா மொழி விநாயகர் கோவிலில் வைகாசி மாத சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் 108 சங்காபிஷேகமும், யாக சாலை வேள்வியும் நடந்தது.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்து, கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.