/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் குறும்படம் வெளியீடு
/
அரசு கல்லுாரியில் குறும்படம் வெளியீடு
ADDED : பிப் 22, 2025 05:12 AM

வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது.
இக்கல்லுாரியில் செயல்படும் போதைப் பொருள் தடுப்பு சங்கத்தின் சார்பில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தை, 'அடிமைகள்' என்ற பெயரில் தயாரித்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் மாணவர்கள் மாணவர்கள் லோகேஸ்வரன், யோகேஸ்வரன், முகிலன், சஞ்சய், பார்த்தசாரதி, பிரித்திகா, ஜெசி, நேதாஜி, புவனேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தை ரவிக்குமார் எம்.பி., வெளியிட, கல்லுாரி முதல்வர் வில்லியம் பெற்றுக் கொண்டார். படத்தில் நடித்த மாணவ, மாணவிகளை பாராட்டினர்.
ஒருங்கிணைப்பாளர் காந்திமதி நன்றி கூறினார்.

