/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அலுவலகங்களில் பொன்முடி படத்தை வைப்பதா.. மஸ்தான் படத்தை வைப்பதா? விழுப்புரம் மாவட்டத்தில் சர்ச்சை நீடிப்பு

ADDED : அக் 21, 2024 10:50 PM

ஒரே உறையில் இரண்டு கத்தி இருந்தால் சர்ச்சை என்பது போல, விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி, மஸ்தான் என இரண்டு அமைச்சர்கள் இருந்தனர்.
இதனால் கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் தொடர்ந்து இடியாப்ப சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மஸ்தானிடமிருந்து முதலில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியும், அடுத்து அமைச்சர் பதவியையும் கட்சி தலைமையால் பறிக்கப்பட்டது.
தற்போது மஸ்தானிடம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி மட்டும் உள்ளது.
கோஷ்டி பூசலை தவிர்க்கும் வகையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி மட்டுமே அமைச்சராக உள்ளார்.
இருந்தும் வடக்கு மாவட்டத்தில் கோஷ்டி பூசல் சிக்கல் நீரு பூத்த நெருப்பாக இன்றளவும் தொடர்கின்றது.
மஸ்தான் அமைச்சராக இருந்த போது, வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர்மன்ற அலுவலகம், ஒன்றிய சேர்மன் அலுவலகம், பேரூராட்சி அலுவலம் அனைத்திலும் மஸ்தான் படம் பிரதானமாக இடம் பெற்றிருந்தது.
தற்போது மஸ்தான் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும், பல அலுவலகங்களில் மஸ்தான் படத்தை அவரது ஆதரவாளர்கள் எடுக்க மனமில்லாமல் வைத்துள்ளனர்.
சிலர் பொன்முடி படத்தை வைத்திருந்தாலும், பெரும்பாலான அலுவலகங்களில் மஸ்தான் படமே ஜொலிக்கின்றது. ஒரு சிலர் நமக்கேன் வம்பு என்று, பொன்முடி, மஸ்தான் படத்தை வைத்தால் சிக்கல் என்று, ஸ்டாலின், உதயநிதி படத்தை மட்டும் வைத்துவிட்டு, நிம்மதியாக இருக்கின்றனர்.