/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்டேஷனை ஆட்டி படைக்கும் எஸ்.ஐ., :புலம்பும் போலீசார்
/
ஸ்டேஷனை ஆட்டி படைக்கும் எஸ்.ஐ., :புலம்பும் போலீசார்
ஸ்டேஷனை ஆட்டி படைக்கும் எஸ்.ஐ., :புலம்பும் போலீசார்
ஸ்டேஷனை ஆட்டி படைக்கும் எஸ்.ஐ., :புலம்பும் போலீசார்
ADDED : ஜூன் 18, 2024 05:10 AM
விழுப்புரம் நகரத்தின் மையத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர், தனக்கு தான் எங்குமே மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டும் என எண்ணி, பணியில் கூட தனது கம்பீரத்தை குறைக்காமல் இருந்து வருகிறார். சமீபத்தில் கூட, இவர், இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஒருவரை தாக்கியதாக அந்த அமைப்பு நிர்வாகிகள், மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்துள்ளனர்.
அதன் பேரில், அந்த சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு, பின் அவர் தனது செல்வாக்கு மூலம் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை பயன்படுத்தி மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு பணிக்கு வந்துள்ளார். இவர், அந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இல்லாத நேரத்தில், தனது செல்வாக்கை காட்டுவதற்காக, அங்குள்ள போலீஸ்காரர்களை பணி செய்ய விடாமல் மிரட்டும் தோரணையில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால், ஸ்டேஷன் பணியில் உள்ள போலீஸ்காரர்கள் வெளியே கூட நடந்ததை கூற முடியாமல் புலம்பி வருகின்றனர்.