/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளான்று அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லையே உடன் பிறப்புகள் 'அப்செட்'

ADDED : மார் 11, 2025 06:16 AM
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கடந்த 1 ம் தேதி கொண்டாடப்பட்டது.வழக்கமாக முதல்வர் பிறந்த நாளன்று விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர்கள் திண்டிவனத்திலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் முதல்வர் பிறந்த நாளான 1ம் தேதி முழுதும் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, குழந்தை பிரசவித்த தாயார்களுக்கு பழம்,பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்குவது வழக்கம்.
கடந்த ஆண்டு மாஜி அமைச்சர் மஸ்தான் தங்க மோதிரம் வழங்கினார். அதேபோல் கடந்த 1 ம் தேதி, முதல்வர் பிறந்த நாளான்று, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதற்கு, மஸ்தான் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்வதற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையை அணுகி, 1 ம் தேதி பிறந்த குழந்தைகள் லிஸ்ட்டை கேட்ட போது, ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து தி.மு.க.,நிர்வாகிகள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகியும் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்று தெரிவித்தனர்.
கடைசி கட்டமாக முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையை அணுகி கேட்டபோது, கடந்த 1ம் தேதி விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் எந்த குழந்தையும் பிறக்கவில்லை என்றும், விழுப்புரம் மைய மாவட்ட தி.மு.க., பகுதியில் தான் குழந்தைகள் பிறந்துள்ளது என்று தெரிவித்தனர்.
முதல்வர் பிறந்த நாளான்று விழுப்புரம் வடக்கு மாவட்ட பகுதியில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்ற செய்தி, மாஜி அமைச்சர் மஸ்தான் ஆதரவாளர்களை அப்செட்டாக்கியது.