/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிளஸ் 2 தேர்வில் சிகா பள்ளி சாதனை
/
பிளஸ் 2 தேர்வில் சிகா பள்ளி சாதனை
ADDED : மே 07, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 179 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் பிரவீன்குமார் 600க்கு 583 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடத்தை பிடித்துள்ளார்.
அதே போல், உயிரியல் 7, வேதியியல் 1, கணக்கு பதிவியல் 1, கணினி பயன்பாடுகள் 1 மாணவர் என பாடம் வாரியாக முறையே 100க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை விசாலாட்சி பொன்முடி, அறக்கட்டளை தலைவர் சாமிநாதன், முதல்வர் கோபால் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பாராட்டினர்.