/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய பென்காக் சிலாட் போட்டி விழுப்புரம் வீரர்களுக்கு வெள்ளி பதக்கம்

ADDED : ஆக 29, 2024 08:05 AM

விக்கிரவாண்டி: பென்காக் சிலாட் தேசிய விளையாட்டு போட்டியில் விழுப்புரம் வீரர்கள் வெள்ளிப் பதக்கம் வென்று ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
லடாக்கில் நடந்த பென் காக் சிலாட் எட்டாவது தேசிய பெடரேஷன் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் தமிழக அணி சார்பில், 43 வீரர்கள் பங்கேற்றனர்.
தமிழக அணி சார்பில், கண்டா எனும் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற விழுப்புரம் வீரர் மோகனவேல், கடலுார் வீரர் போஸ் ராஜகுரு ஆகியோர் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றனர்.
இருவரும் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ள 8வது ஆசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
வெள்ளி பதக்கம் வென்ற வீரர்களை தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, லட்சுமணன் எம்.எல்.ஏ., பயிற்சியாளர்கள் மகேஷ் பாபு, செல்வகுமார் ஆகியோர் பாராட்டினர்.