/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது
/
போதையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது
போதையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது
போதையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது
ADDED : மே 15, 2024 09:00 PM

திருவெண்ணெய்நல்லுார்:விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பல்லரிப்பாளையத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 50, லாரி டிரைவர். இவரது மனைவி அபிராமி, 48. இவர்களுக்கு ஆனந்தகுமார், 28, என்ற மகனும், தேன்மொழி, 22, என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
ஆனந்தகுமார் சித்தலிங்கமடத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளதால், அங்கேயே தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, பல்லரிப்பாளையம் சென்றார் ஆனந்தகுமார்.
குடிபோதையில் இருந்த அவர் தன் தந்தை அரிகிருஷ்ணனிடம், ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க வேண்டும் என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அரிகிருஷ்ணன் வயிறு மற்றும் நெஞ்சில் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
தகவலறிந்த திருவெண்ணைநல்லுார் போலீசார் விரைந்து சென்று, ரத்த வௌ்ளத்தில் கிடந்த அரிகிருஷ்ணனை மீட்டு, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அன்று இறந்து இறந்தார்.
இதுகுறித்து, திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, ஆனந்தகுமாரை கைது செய்தனர்.