/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வண்டல் எடுக்க அனுமதிக்க வேண்டும் தென்புத்துார் விவசாயிகள் கோரிக்கை
/
வண்டல் எடுக்க அனுமதிக்க வேண்டும் தென்புத்துார் விவசாயிகள் கோரிக்கை
வண்டல் எடுக்க அனுமதிக்க வேண்டும் தென்புத்துார் விவசாயிகள் கோரிக்கை
வண்டல் எடுக்க அனுமதிக்க வேண்டும் தென்புத்துார் விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஆக 31, 2024 03:16 AM
செஞ்சி: தென்புத்துார் ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு இந்த ஆண்டு ஏரிகளில் இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் 709 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏரிகளை தேர்வு செய்வதற்கு ஒன்றிய அலுவலகங்கள் மூலம் பரிந்துரை பெற்று ஏரிகளை தேர்வு செய்துள்ளனர்.
வல்லம் ஒன்றியம், தென்புத்துார் கிராம ஏரியின் பெயர் இந்த பட்டியலில் விடுபட்டுள்ளது. எனவே தங்கள் கிராம ஏரியை இந்த பட்டியலில் சேர்த்து மண் எடுப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டு தென்புத்துார் கிராம விவசாயிகள் கலெக்டர் மற்றும் வல்லம் பி.டி.ஓ.,விற்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அவர்கள் அளித்துள்ள மனுவில், 'தென்புத்துார் கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகிறோம். வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ள ஏரிகளின் பட்டியலில் எங்கள் ஊர் ஏரியின் பெயர் விடுபட்டுள்ளது.
இதனால் தென்புத்துார் விவசாயிகள் ஏரியில் மண் எடுக்க முடியாத விலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கி ஏரிக்கு தண்ணீர் வருவதற்குள் தென்புத்துார் ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.