/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடக்க ஒத்துழைக்க எஸ்.பி., வேண்டுகோள்
/
ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடக்க ஒத்துழைக்க எஸ்.பி., வேண்டுகோள்
ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடக்க ஒத்துழைக்க எஸ்.பி., வேண்டுகோள்
ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடக்க ஒத்துழைக்க எஸ்.பி., வேண்டுகோள்
ADDED : ஜூன் 04, 2024 06:19 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக் கையின் போது நடைமுறையை கடைபிடிக்க தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., தீபக் சிவாச் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று 4ம் தேதி, விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.
எந்த பிரச்னையுமின்றி சுமூகமாக நடைபெற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
ஓட்டு எண்ணும் மையத்திற்கு வேட்பாளர்கள், முகவர்கள் அனைவரும் ரெட்டியார் மில்லில் இருந்து காகுப்பம் சாலை வழியாக வந்து, அவர்களின் வாகனங்களை ஓட்டு எண்ணும் மையம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறுத்த வேண்டும்.
அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் மட்டும் பானாம்பட்டு பாதை சந்திப்புக்கு எதிரே கல்லுாரி செல்லும் வழியாக சென்று ஓட்டு எண்ணும் மையம் மெயின் கேட் வழியாக செல்ல வேண்டும். 100 மீட்டருக்கு முன் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இந்த மையத்திற்கு வரும் அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோர் அனுமதிக் கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். அடையாள அட்டை எடுத்து வராத யாரையும் 100 மீட்டருக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் தடை செய்த பொருட்கள் கொண்டுவர அனுமதியில்லை.
எந்தவொரு சட்டம், ஒழுங்கு பிரச்னையுமின்றி ஓட்டு எண்ணிக்கை அமைதியான முறையில் நடக்க அனைத்து கட்சி வேட்பாளர்கள், முகவர்கள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தவறினால் பாரபட்சமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.