/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழங்குடி மக்களிடம் மனு பெறும் சிறப்பு முகாம்: அமைச்சர் மஸ்தான் டென்ஷன்
/
பழங்குடி மக்களிடம் மனு பெறும் சிறப்பு முகாம்: அமைச்சர் மஸ்தான் டென்ஷன்
பழங்குடி மக்களிடம் மனு பெறும் சிறப்பு முகாம்: அமைச்சர் மஸ்தான் டென்ஷன்
பழங்குடி மக்களிடம் மனு பெறும் சிறப்பு முகாம்: அமைச்சர் மஸ்தான் டென்ஷன்
ADDED : செப் 06, 2024 12:27 AM

அவலுார்பேட்டை : மேல்மைலையனுாரில் பண்டைய பழங்குடி இருளர் இன மக்களின் தேவைகள் குறித்து மனு பெறும் சிறப்பு முகாம் நடந்தது.
மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் ஆதி திராவிடர், பழங்குடி நலத்துறை மற்றும் ஜன்மான் திட்டத்தின் கீழ் பண்டைய இருளர் இன மக்களுக்கான ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஜாதி சான்று தேவைகள் குறித்து மனு பெறும் சிறப்பு முகாம் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். தாசில்தார் தனலட்சுமி வரவேற்றார்.
அமைச்சர் மஸ்தான் முகாமை துவக்கி வைத்து பழங்குடி மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், பி.டி.ஓ.,கள் சிவசண்முகம், சையத் முகமத், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார். செஞ்சி ஆதி திராவிடர் நல தனி தாசில்தார் புஷ்பாவதி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், மக்கள் பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் டென்ஷன்
முகாமில், பழங்குடி இருளர் மக்கள் வசிக்கும் 32 கிராம ஊராட்சி தலைவர்களில் பெரும்பாலான தலைவர்கள் பங்கேற்கவில்லை. இதனால், டென்ஷனான அமைச்சர் மஸ்தான், பி.டி.ஓ., சையத் முகமதுவிடம், அனைத்து தலைவர்களுக்கும் முகாம் நடப்பது குறித்து தகவல் அனுப்பினீர்களா என கேட்டார். அதற்கு பி.டி.ஓ., அனுப்பியதாக கூறினார். முகாமிற்கு வராத தலைவர்களுக்கு, ஏன் வரவில்லை என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும் படி கூறினார்.