/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெண்மணியாத்துாரில் சிறப்பு மருத்துவ முகாம்
/
வெண்மணியாத்துாரில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 25, 2024 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துார் கிராமத்தில், தமிழக அரசின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வெண்மணியாத்துார் ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த முகாமிற்கு, ஊராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முகாமில், கர்ப்பணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம் உள்ளிட்டவைகளை ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் ராஜாராம், மாவட்ட கவுன்சிலர் மனோசித்ரா ராஜேஸ்வரன், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.