sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் நீச்சல் குளத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

/

விழுப்புரம் நீச்சல் குளத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

விழுப்புரம் நீச்சல் குளத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

விழுப்புரம் நீச்சல் குளத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி


ADDED : ஏப் 26, 2024 11:55 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்களுக்கான நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின்கீழ் பயிற்சி நடக்க உள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தை, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திட, அரசு அறித்துள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில், நீச்சல் பயிற்சிக்கான முதல் வகுப்பு நிறைவுபெற்றது. இரண்டாம் வகுப்பு நடைபெற்று வருகிறது.

இதற்கு அடுத்ததாக, மூன்றாம் வகுப்பு (01.05.2024 முதல் 14.05.2024), நான்காம் வகுப்பு ( 16.05.2024 முதல் 29.05.2024), ஐந்தாம் வகுப்பு( 1.06.2024 முதல் 14.06.2024) ஆகிய பிரிவுகளாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்களுக்கும் நடைபெறவுள்ளது. 12 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

12 நாட்களுக்கு பயிற்சி கட்டணம் ரூ.1770 ஆகும். பயிற்சி கட்டணத்தை, அங்குள்ள அலுவலகத்தில் செலுத்தலாம். கட்டணம் செலுத்த வரும்போது, ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். ஒருவருக்கான பயிற்சி நேரம் 1 மணி நேரம் ஆகும். நீச்சல் குளம், திங்கள் கிழமை விடுமுறையாகும்.

எனவே, இந்த பயிற்சி வகுப்புகளில், விழுப்புரம் மாவட்டத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ 9786471821, 9566499010, 7401703485 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விபரம் பெறலாம் என, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us