/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி
/
மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி
ADDED : ஆக 28, 2024 04:57 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 'பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியை, கலெக்டர் பழனி துவக்கி வைத்து பேசினார்.
போட்டியில், மாவட்டத்தில் உள்ள 20 அரசு மற் றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் இருந்து 761 மாணவிகள் பங்கேற்றனர்.
கபடி, வாலிபால், கூடைப் பந்து, தடகளம், கால்பந்து, கையூந்து பந்து உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
போட்டிகளின் முடிவில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, அரசு கலைக் கல்லுாரி முதல்வர் சிவக்குமார், இ.எஸ்., கல்விக்குழும பொதுச் செயலாளர் பிரியா செல்வமணி, தடகள பயிற்சியாளர் ராஜேஸ்வரி உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.