/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி 17வது ஆண்டாக சாதனை
/
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி 17வது ஆண்டாக சாதனை
ADDED : மே 10, 2024 09:19 PM

விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக் பள்ளி, பத்தாம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து 1வது ஆண்டாக நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 102 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவி பிரியதர்ஷினி 495, சுடர் ஒளி 494, மாணவர் தஸ்தகீர்கான் 493 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
கணிதத்தில் 14 பேர், அறிவியலில் 2 பேர், சமூக அறிவியலில் ஒரு மாணவர் உட்பட 17 பேர், 100க்கு100 மதிப்பெண் பெற்றனர். 490 மதிப்பெண்ணுக்கு மேல் 5 பேர்,450க்கு மேல் 47 பேர், 400க்கு மேல் 50 பேர் பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளியின் தாளாளர் பிரகாஷ், பள்ளியின் செயலாளர் ஜனார்த்தனன் பாராட்டினர்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுமதி, மகாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.