/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம்
/
ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம்
ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம்
ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 04, 2024 11:35 PM

விழுப்புரம்: தமிழ்நாடு ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாநில தலைவர் தீர்த்தான் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விவேக், பொருளாளர் ஆசைத்தம்பி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் நீண்ட காலமாக காலியாக உள்ள நிரந்தர ஆசிரியர், பணியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் ஒருங்கிணைந்த சமையல் கூட நடைமுறையை கைவிட்டு முன்புள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் போன்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் வரும் 19 ம் தேதி அனைத்து ஆசிரியர், பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.