/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில ஷிடோரியோ கராத்தே போட்டி திண்டிவனம் மாணவர்கள் சாதனை
/
மாநில ஷிடோரியோ கராத்தே போட்டி திண்டிவனம் மாணவர்கள் சாதனை
மாநில ஷிடோரியோ கராத்தே போட்டி திண்டிவனம் மாணவர்கள் சாதனை
மாநில ஷிடோரியோ கராத்தே போட்டி திண்டிவனம் மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 04, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: மாநில அளவில் நடந்த ஷிடோரியோ கராத்தே போட்டியில், திண்டிவனம் மாணவர்கள் சாதனை புரிந்தனர்.
மாநில அளவிலான ஷிடோரியோ கராத்தே போட்டி திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார், ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 28ம் தேதி நடந்தது.
இதில் தமிழகம் முழுதுமிருந்தும் 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில், திண்டிவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்றவர்களை கிருஷ்ணமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டினார்.