/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேம்பாலத்தில் தடுப்புச் சுவர் உயர்த்த நடவடிக்கை தேவை
/
மேம்பாலத்தில் தடுப்புச் சுவர் உயர்த்த நடவடிக்கை தேவை
மேம்பாலத்தில் தடுப்புச் சுவர் உயர்த்த நடவடிக்கை தேவை
மேம்பாலத்தில் தடுப்புச் சுவர் உயர்த்த நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 22, 2024 11:59 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம், வழுதாவூர் கூட்ரோடு அருகே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதில் திருச்சி - சென்னை சாலையில் சர்க்கரை ஆலை எதிரே உள்ள பகுதியில் மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் தடுப்புச் சுவர் மிகவும் குறைந்து 2 அடி உயரத்தில் உள்ளது.
இதனால் இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டிகள், இலக ரக, கனரக வாகன ஓட்டிகள் இந்த தடுப்புக் கட்டையில் எதிர்பாரத விதமாக மோதி மேற்கு புறமாக உள்ள 20 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, நான்கு வழிச்சாலையை பாராமரிக்கும் விக்கிரவாண்டி, உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் நகாய் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து பாலத்தை நேரில் ஆய்வு செய்து, தடுப்புச் சுவரை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.