/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவி கடத்தல்: வாலிபர் மீது வழக்கு
/
மாணவி கடத்தல்: வாலிபர் மீது வழக்கு
ADDED : ஆக 23, 2024 07:10 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக, வாலிபர் அவரது பெற்றேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி, வீட்டிலிந்த மாணவி, திடீரென காணாமல் போனார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில், காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் மாணவன் மற்றும் அவரது பெற்றோர் சேர்ந்து, தனது மகளை கடத்திசென்று விட்டதாக புகார் அளித்தனர். அதன்பேரில், அந்த மாணவன் அவரது பெற்றோர் உள்ளிட்ட 3 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.