ADDED : மே 21, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
மரக்காணம்: மரக்காணம் அருகே 10ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் நந்தினி, 15; அகரத்தில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது.
அதில், நந்தினி குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். உடன், புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
