ADDED : மே 13, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் காணாமல் போன பள்ளி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் மாலதி, 17; இவர், அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 9ம் தேதி இரவு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.