UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 09:38 PM

திண்டிவனம்: திண்டிவனம் ரயில் நிலையத்தில் ‘ஸ்வச்சதா ஹி சேவா 2026’ நிகழ்ச்சியில் துாய்மைக்கான உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
மத்திய அரசு சார்பில் ‘ஸ்வச்சதா ஹி சேவா 2026’ செப்டம்பர் 17ம் தேதி முதல் வரும் வரும் 15ம் தேதி வரை நாடு முழுதும் துாய்மைக்கான தன்னார்வத்தையும் கூட்டுச் செயலையும் வலுப்படுத்தும் நோக்கத்தில் நடந்து வருகிறது.
இதையொட்டி திண்டிவனம் ரயில் நிலையத்தில், கருவம்பாக்கம் தரம்சந்த் ஜெயின் பள்ளியின் என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் துாய்மைக்கான உறுதிமொழியை ஏற்றனர்.
உதவி வணிக மேலாளர் பிரபு, வணிக ஆய்வாளர் பாரி, ரயில் நிலைய அதிகாரி ராம் கேஷ்மீனா, ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் தேசி உட்பட பலர் பங்கேற்றனர்.
