நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து ஊராட்சிகளிலும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின் நிலை குறித்தும் பி.டி.ஓ.,க்கள் மற்றும் பொறியாளர்கள் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் பத்மஜா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.