/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம்
/
சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம்
ADDED : மார் 12, 2025 11:45 PM

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருவெண்ணெய்நல்லுார் சார் பதிவாளர் அலுவலகம் கடந்த 1896ம் ஆண்டு முதல் திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையம் எதிரே இயங்கி வந்தது. கட்டடம் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் பொதுப்பணித்துறை சார்பில் புதிய கட்டடம் கட்ட 2.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கவுள்ளது.
இதனால் தற்காலிகமாக கடலுார் சாலை தீபாஞ்சலம்மன் கோவில் எதிரே உள்ள தனியார் கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பதிவுத்துறை சம்பந்தமான அனைத்து சேவைகளையும் புதிய இடத்திற்கு சென்று பெறலாம் என சார் பதிவாளர் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.