/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோடை பருவ பயிர் சாகுபடி: துணை இயக்குனர் ஆய்வு
/
கோடை பருவ பயிர் சாகுபடி: துணை இயக்குனர் ஆய்வு
ADDED : மே 10, 2024 01:05 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வட்டாரத்தில் கோடை பருவ பயிர் சாகுபடியை வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
விக்கிரவாண்டி வட்டாரத்தில் கோடை பருவ கால பயிர் சாகுபடியாக எள் பயிரிடப்பட்டுள்ளது.
நேற்று காலை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சீனிவாசன், விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பத்தில் காத்தவராயன் என்பவரின் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் சாகுபடியை பார்வையிட்டார்.
அப்போது, விவசாயிகளிடம் அவர், 'கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப மிகுதி மற்றும் நீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு குறைந்த அளவு நீரைக் கொண்டு வளரும் பயிர்களான வேர்க்கடலை, எள், உளுந்து போன்ற பயிர்களை சாகுபடி செய்து அதிகலாபம் பெற முடியும்' என்றார்.
வேளாண்மை உதவி இயக்குனர் கங்கா கவுரி, உதவி வேளாண்மை அலுவலர் ராமமூர்த்தி, முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.