ADDED : ஜூன் 02, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கோடை கால தற்காப்பு சிலம்பம் பயிற்சி நடந்தது.
விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில், 15 நாட்களாக சிறுமியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று காலை பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
பள்ளி தாளாளர் சோழன், பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட மாத்ரு சக்தி அமைப்பாளர் சுபாஷினி, மாணவிகளுக்கு நாயன்மார்கள் வரலாறு புத்தகம் வழங்கினார்.
அன்பு சிலம்பாட்டம் அறக்கட்டளை தலைவி, பயிற்சியாளர் அன்பரசி பயிற்சி அளித்தார். சிலம்பம் சாதனையாளர் பொன்மதியாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அறக்கட்டளை செயலாளர் வனிதா நன்றி கூறினார்.