/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் சுமோ கார் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
/
விழுப்புரத்தில் சுமோ கார் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
விழுப்புரத்தில் சுமோ கார் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
விழுப்புரத்தில் சுமோ கார் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
ADDED : மே 30, 2024 05:09 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையோரம் நிறுத்தியிருந்த சுமோ காரை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் கமலக்கண்ணன், 50; இவர், தனது சுமோ காரை (பிஓய் 01- ஏடி 2904) வாடகைக்கு விட்டுள்ளார்.
காரை, டிரைவர் முருகையன் ஓட்டி வருகிறார். இந்த நிலையில், கடந்த 11ம் தேதி, விழுப்புரத்தில் அந்த சுமோ காரை, டிங்கரிங் வேலை செய்வதற்கு எடுத்து வந்து, விழுப்புரம்-எல்லீஸ்சத்திரம் சாலையில், தனியார் பீர் தொழிற்சாலை அருகே நிறுத்தி வைத்திருந்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, சுமோ காரை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், விழுப்புரம் தாலுகா போலீசில், கமலக்கண்ணன் புகார் அளித்தார். விழுப்புரத்தில் கடந்த 11ம் தேதி திருடப்பட்ட சுமோ கார், கடந்த 14ம் தேதி உளுந்தூர்பேட்டை டோல்கேட், பிறகு திருச்சி அடுத்த சமயபுரம் டோல்கேட் வழியாக கடந்து சென்றுள்ளதும், அதற்கான பாஸ்டேக் கட்டண மெசேஜிம் உரிமையாளருக்கு வந்துள்ளது. திருடுபோன காரின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.