/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூப்பர் டிராபி ஜூடோ போட்டி விழுப்புரம் மாணவர்கள் சாதனை
/
சூப்பர் டிராபி ஜூடோ போட்டி விழுப்புரம் மாணவர்கள் சாதனை
சூப்பர் டிராபி ஜூடோ போட்டி விழுப்புரம் மாணவர்கள் சாதனை
சூப்பர் டிராபி ஜூடோ போட்டி விழுப்புரம் மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 22, 2024 12:32 AM

விழுப்புரம் : தமிழ்நாடு ஜூடோ அசோசியேஷன் சார்பில் இந்தாண்டிற்கான சூப்பர் டிராபி ஜூடோ சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நடைபெற்றது.
கடந்த 17, 18 ம் தேதிகளில் நடந்த இந்த போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், விழுப்புரம் மாவட்டம் சார்பில் 16 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில், மாணவிகளுக்கான பிரிவில் விழுப்புரம் மாணவி கவுசிகா முதலிடத்தை பிடித்து சாதித்தார். அதே போல், சிறுவர்களுக்கான பிரிவில் மாணவர்கள் டினிவா, திவான் ஆகியோர் 3வது பரிசை வென்று சாதித்து விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, வாழ்த்தி பாராட்டினார். தொடர்ந்து சோழா சங்க பயிற்சியாளர் குணசேகரன், மாவட்ட ஜூடோ சங்க செயலாளர் இளமுருகன் ஆகியோர் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்தினர்.