/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டணம் ஊராட்சி பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
/
பட்டணம் ஊராட்சி பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
பட்டணம் ஊராட்சி பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
பட்டணம் ஊராட்சி பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : செப் 07, 2024 05:37 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே உள்ள பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
திண்டிவனம் ஹோஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பள்ளியில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மேரி புளோரா வரவேற்றார்.
சங்க மாவட்ட தலைவர்கள் அன்னை சஞ்சீவி, அன்னை சந்தானம் செயலாளர் சுகுமார், ஐய்யப்பன், ஊராட்சி தலைவர் தலைவர் ரவி முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி பள்ளி மாணவர்களின் பேச்சு போட்டியும், கலை நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. சங்க பொருளாளர் நவநீதன் நன்றி கூறினார்