/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெல் சாகுபடியில் கூடுதல் மகசூலுக்கு இடுபொருட்கள் வழங்கல்
/
நெல் சாகுபடியில் கூடுதல் மகசூலுக்கு இடுபொருட்கள் வழங்கல்
நெல் சாகுபடியில் கூடுதல் மகசூலுக்கு இடுபொருட்கள் வழங்கல்
நெல் சாகுபடியில் கூடுதல் மகசூலுக்கு இடுபொருட்கள் வழங்கல்
ADDED : ஆக 24, 2024 07:01 AM
வானுார்: வானுார் வட்டாரத்தில் நெற்பயிரில் அதிக மகசூல் பெற, பட்டியலின விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனமும், காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை துறையும் இணைந்து திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். காரைக்கால் வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் கலந்துகொண்டு இந்த திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். ஒன்றிய சேர்மன் உஷா வாழ்த்துரை வழங்கினார்.
வேளாண்மை கல்லுாரியின் மண்ணியல் துறை இணை பேராசிரியர் குமரவேல் பங்கேற்று மண் மாதிரி எடுத்தல் குறித்தும், பேராசிரியர் பகவதி அம்மாள் பங்கேற்று ஒருங்கிணைந்த உர நிர்வாகம் குறித்தும், பேராசிரியர் சங்கர் மண்வளம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.
வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், நெல் சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் மற்றும் நுண்ணுாட்ட உரங்கள் உயிர் உரங்கள், உயிரக பூஞ்சான கொல்லிகள் பயன்படுத்தும் விதம் குறித்தும் எடுத்துரைத்தார். உதவி பேராசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார். இதில் 25 விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.