/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு
/
நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு
நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு
நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு
ADDED : மே 08, 2024 11:53 PM
திண்டிவனம் : உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் ஹர் சஹாய் மீனா வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
தமிழ்நாடு அரசு பொது மக்களுக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, முதன்மை செயலாளர் மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் ஹர் சஹாய் மீனா, கலெக்டர் பழனி ஆகியோர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
மயிலம் ஊராட்சி வேம்பூண்டி கிராமத்தில் பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டத்தில் ரூ.20 லட்சத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை பார்வையிட்டனர்.
பெலாக்குப்பம் ஊராட்சியில் ரூ.35 லட்சத்தில் குளம் சீரமைக்கும் பணிகள், அகூர் கிராமத்தில் ரூ.10 லட்சத்தில் குளம் புனரமைக்கும் பணி மற்றும் அகூர் ரேஷன் கடையில் பொருட்கள் தரமாக வழங்கப்படுகின்றதா என, ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், சப்கலெக்டர் திவ்யான்சு நிகம், ஊராக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.