/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் கண்காணிப்பு பார்வையாளர்கள் ஆய்வு
/
தேர்தல் கண்காணிப்பு பார்வையாளர்கள் ஆய்வு
ADDED : மார் 31, 2024 06:48 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு மையங்களின் செயல்பாடுகள் குறித்து, தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி, தேர்தல் பொது பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா, காவல்துறை பார்வையாளர் திரேந்திர சிங் குஜ்ஜியால், தேர்தல் செலவின பார்வையாளர் ராகுல் சிங்கானியா ஆகியோர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம், பறக்கும்படை வாகன தணிக்கை கண்காணிப்பு மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து, நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, தேர்தல் தொலைபேசி கட்டுப்பாட்டு அறை, சி-விஜில், மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் மற்றும் வாகன தணிக்கை மையத்தில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாளர்களை கொண்டு கண்காணிக்கப்பட்டு வருவது. தேர்தல் தொலைபேசி கட்டுப்பாட்டு அறை, சி-விஜில் மூலமாக வரும் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்கள் பதிவு செய்துள்ளது குறித்து ஆய்வு செய்து, அதன் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை கேட்டறிந்தனர்.

