/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாசில்தார் - எஸ்.ஐ., வாக்குவாதம்: வானுாரில் பரபரப்பு
/
தாசில்தார் - எஸ்.ஐ., வாக்குவாதம்: வானுாரில் பரபரப்பு
தாசில்தார் - எஸ்.ஐ., வாக்குவாதம்: வானுாரில் பரபரப்பு
தாசில்தார் - எஸ்.ஐ., வாக்குவாதம்: வானுாரில் பரபரப்பு
ADDED : ஏப் 18, 2024 11:27 PM
வானுார் : வானுாரில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியின் போது, சப் இன்ஸ்பெக்டருக்கும், தாசில்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் இன்று 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட வேனில் அனுப்பும் பணி நடந்தது.
நேற்று மதியம் 1:00 மணிக்கு, வானுார் சட்டசபை தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மைங்களுக்கு, தாலுகா அலுவலகத்தில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, பாதுகாப்பு பணிக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாசில்தார் நாராயணமூர்த்தியிடம், எந்தெந்த வாகனங்கள் வரிசைப்படி அனுப்பப்பட உள்ளது என்ற விபரத்தை கேட்டார்.
அப்போது துாரத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, முன்கூட்டியே வாகனத்தை அனுப்பவும், அதன் பிறகு குறுகிய துாரத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதுபோன்று அனுப்பினால், தாமதம் ஏற்படும் எனக்கூறி, சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாசில்தாரிடம் கூறினார்.
நாங்கள் வரிசைப்படி அனுப்புகிறோம். எந்தெந்த வாகனங்களை எப்படி அனுப்புவது என எங்களுக்குத் தெரியும் என தாசில்தார் கூறியதால் இருவருக்கமிடையே ஏற்பட்டது.
இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. உடன் அங்கிருந்த சக போலீசார் சப் இன்ஸ்பெக்டரை சம ரசம் செய்து அழைத்து சென்றனர்.

