ADDED : ஜூலை 25, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
வானுார்: வானுார் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வானுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த சக்தி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக விழுப்புரம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த விஸ்வநாதன், வானுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று வானுார் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
