/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் கூட்டம்
/
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் கூட்டம்
ADDED : மே 15, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.
ஜவஹர் அலிகான் வரவேற்றார். சங்க செயலாளர் ஜெயகாந்தன் கூட்ட அறிக்கை வாசித்தார். சங்க நிர்வாகிகள் சுந்தரம், மணிக்கவுண்டர், சுப்ரமணி, பழனிவேல், கோவிந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் மருத்துவக்காப்பீடு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கருவூல நேர்காணல் மாத மாதம் என்பதை மாற்றி பழைய முறைப்படி ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைமுறை படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.