/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
/
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
ADDED : ஆக 15, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்க தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். சங்க உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். செயலாளர் ஜெகந்நாதன், ஆண்டறிக்கை வாசித்தனர்.
ஓய்வூதியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவக்காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும், ஆண் மூத்த குடிமக்களுக்கு மகளிரைப்போல கட்டணமில்லா பஸ் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டுமென உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.