/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
/
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 30, 2024 11:42 PM
விழுப்புரம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, விழுப்புரம் அடுத்த தென்மங்கலம் கிராமத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். துணை தலைவர் அய்யனார், மாநில பொதுக்குழு தமிழ்செல்வி, இணை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ரமேஷ் சின்னப்பராஜ் வரவேற்றார்.
இதில், பங்கேற்ற நிர்வாகிகள் வீதி, வீதியாக சென்று கல்வி, சமத்துவம், சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு நாடகம், பாடல்களை பாடினர்.
வட்டார தலைவர் கிருஷ்ணா, செயலாளர் சதீஷ், பொருளாளர் அருள், துணை தலைவர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.