/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் முன்னணி பொதுக்குழு கூட்டம்
/
தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் முன்னணி பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் முன்னணி பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் முன்னணி பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 08, 2024 04:49 AM

செஞ்சி: செஞ்சியில் தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் முன்னணியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கே.ஏழுமலை, காமராஜ், நாகராஜன், சந்திரசேகர், எஸ்.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சந்தானகிருஷ்ணன் வரவேற்றார்.
நிர்வாகிகள் முருகன், கலைவாணன், சாரதி, தனசேகர், நாகராஜ், செல்வராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 91 சதவீதமும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 95 சதவீதமும் தேர்ச்சியை தந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கல்வித்தரத்தை உயர்த்த, அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்ய 537 தற்காலிக இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், செயலாளர், இயக்குனர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.